கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை மயூரி கியத்தாரி. இவர் 'கிருஷ்ண லீலா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்திற்காக சிறந்த கன்னட நடிகைக்கான விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார்.
இதனையடுத்து தனது நீண்டகால காதலரான அருண் என்பவரை கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அனைவருக்கும் நடிகர் ஆகும் ஆசை இருப்பதாக நடிகை மயூரி கியத்தாரி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் "இந்த ரீல்ஸ் உலகத்தில் அனைவருக்கும் நடிகர் ஆகும் ஆசை இருக்கிறது. அதற்கு நம்மிடம் ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி அவசியம். நடிக்கும் திறனை வளர்ப்பதற்கு தொலைக்காட்சி ஒரு சிறந்த மேடையாக இருக்கும்.
இதன் மூலம் ரசிகர்களுடன் இணைந்து இருக்க முடியும். தொடர்ந்து நடிப்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளவும், வளரவும் முடியும்" என்று மயூரி கியத்தாரி தெரிவித்துள்ளார்.