நீதியின் கடவுகளாக கருதப்படும் சனி பகவான், கும்ப ராசியலிருந்து வக்ர நிலையில் பின்னோக்கி நகரவுள்ளதால், சில ராசியினருக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். அந்த ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
ஒரே ராசியில் சனி பகவான் நீண்ட காலம் இருக்கும் நிலையில், தற்போது நேற்று இரவு 12.35 மணிக்கு கும்ப ராசியிலிருந்து வக்ர நிலையில் பின்னோக்கி நகர உள்ளார். இந்த நிலை நவம்பர் மாதம் வரை இருக்கும்.
மேலும் இந்த பெயர்ச்சியின் காரணமாக சில ராசியினருக்கு மோசமான தாக்கமும் ஏற்படும். எந்தெந்த ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மிதுனம்
மிதுன ராசியினர் இந்த பெயர்ச்சியினால் வாழ்க்கையில் சில தொல்லைகளும், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புள்ளது. கடினமாக உழைத்தாலும் அதற்கான பலன் கிடைக்காமல் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் எடுக்க வேண்டும். முயற்சியை மட்டும் ஒருபோதும் கைவிட்டுவிடாதீர்கள்.
கடகம்
இந்த கால கட்டத்தில் கடக ராசியினருக்கு செலவுகள் அதிகமாகி நிதி சுமை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தில் இதனால் மன அழுத்தமும் ஏற்படும். சற்று கவனமாக இருக்கவும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த காலக்கட்டத்தில் செய்யும் வேலைக்கு வருமானம் கிடைத்தாலும், செலவுகள் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்காமல் இருக்கும். உங்களது ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் எடுக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் இந்த பெயர்ச்சியில் சில சிரமங்களை சந்திக்க நேரிடுவதுடன், அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். இந்த கட்டத்தில் கடினமாக உழைத்தால் மட்டுமே எதிர்பார்த்த பலன் கிடைக்கும். நிதிநிலை மோசமடைந்து கடன் வாங்கும் சூழல் ஏற்படும். திருமண வாழ்க்கையில் மன கசப்புகளும் ஏற்படும்.