பொதுவாகவே நாம் கிரீன் டீ பற்றி அதிகம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் ப்ளூ டீ பற்றி கொஞ்சம் வித்தியாசமாகவும் மருத்துவ குணமும் கொண்டிருக்கிறது.

இந்த ப்ளூ டீயை சங்கு பூ டீ என்றும் சொல்வார்கள். கிரீன் டீ எப்படி உடலுக்கு நன்மைகளை கொடுக்குமோ அதுபோல இந்த சங்கு பூ டீயும் உடலுக்கு அத்தனை நன்மைகளைக் கொடுக்கும்.

சங்கு பூவானது ஏராளமான நன்மைகள் இருக்கிறது. மூச்சுத் திணறல் சுவாசக் கோளாறு, இதயம் என பல பிரச்சினைகளுக்கு சிறந்த மருத்துவமாகும்.

இந்தப் பூவானது கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கவும் உதவுகிறது.

சங்கு பூவின் இலை துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டிருக்கும் இது சிறுநீர் பெருக்கும், குடல் புழுக்களைக் கொல்லும், உடல் வெப்பத்தைத் தணிக்கும் போன்றவற்றைக் தணிக்கும்.

இந்த சங்கு பூ டீயை தயாரிக்க முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து தண்ணீரில் சங்கு பூக்களை போட்டு 5 நிமிடம் கழித்து வடித்து அதில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றை சொட்டுக்களாக விட்டு தேவையான அளவு தேன் சேர்த்து குடிக்கலாம்.

 நன்மைகள்   

  • உடல் வெப்பத்தை சீராக வைக்கும்
  • புற்றுநோய் செல்களை அழிக்கும்
  • குடற்புண்ணுக்கு அருமருந்து
  • அஜீரணக் கோளாறு நீங்கும்
  • உடல் எடை குறையும்
  • மன அழுத்தத்தை குறைக்கும்
  • நோய் எதிர்ப்பு சக்தி
  • நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்கும்
  • ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி வளர்ச்சியை தூண்டும்
  • வயிற்றில் உண்டாகும் எரிச்சலை தடுக்கும்