இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 467 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 76 ஆயிரத்து 514 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 4 ஆயிரத்து 496 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் 523 பேர் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகியதாக நேற்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
பொரலஸ்கமுவ, கல்கிசை, கொட்டுகொட மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.