மண்பானையில் உணவுகளை சமைக்கும் பழக்கம் தற்போது இன்றைய தலைமுறையினரிடம் ஆர்வம் இருந்து வரும் நிலையில், சில விடங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது போன்று அதனை சமைக்கும் பாத்திரமும் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. முந்தைய காலத்தில் மண்பானையில் சமையல் செய்து சாப்பிடும் வழக்கம் இருந்தது.

இவை அதிக வாசனையுடனும், அதிக சுவையுடன் மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கான சத்துக்களையும் கொண்டுள்ளதாம்.

மண்பானையில் சமைக்கும் உணவுகளில் இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், சல்பர் போன்றவை உள்ளன.

மண்பானைகளை வாங்கி புதிதாக சமைக்கும் போது வெறும் தண்ணீரில் கழுவி அதை சமைக்கப் பயன்படுத்தக் கூடாது.

புதிதாக வாங்கும் மண்பானையை முதலில் 8 முதல் 10 மணி நேரம் தண்ணீரில் ஊற விட வேண்டும். மண்பாண்டங்கள் காணப்படும் நுண்துறைகள் ஈரப்பதத்தினை உண்டாக்குவதால், வெப்பத்தினை தக்க வைப்பதற்கு உதவுகின்றது.

பின்பு புது பானையில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்... இவ்வாறு செய்தால் சமையலுக்கு புதிய மண்பானை தயாராகிவிட்டது என்று அர்தமாம்.

மண்பானையில் சமைக்கப் போறீங்களா? இந்த விஷயத்தை கவனத்தில் வைச்சிக்கோங்க! | How To Use Earthen Pots

புதிய பானையில் கொஞசமாக கோதுமை மாவு சிறிது எடுத்து குறித்த மண்பாத்திரத்தில் போட்டு, அனைத்து இடங்களில் படும்படி நன்றாக விரவிடவும்.

இவ்வாறு செய்வதால், பானையில் படிந்திருக்கும் மண்துகள்கள் உதிர்ந்துவிடும். பின்பு பானையை அடுப்பில் வைத்து குறித்து மாவு கருகும் வரை வெப்பப்படுத்திவிட்டு பின்பு கீழே இறக்கவும்.

பின்பு பானை ஆறியதும் துணியை வைத்து நன்று சுத்தம் செய்துவிட்டு, குளிர்ந்த பின்னர் பானையை நன்று கழுவிட்டு சமைக்க பயன்படுத்தலாம்.