சுந்தரபாண்டியன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். தொடர்ந்து  கும்கி,  பாண்டிய நாடு,  மஞ்சப்பை, வேதாளம்,  மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக சந்திரமுகி 2 படத்தில் லட்சுமி மேனன் நடித்திருந்தார்.

லட்சுமி மேனன் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் அவரிடம் "உங்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால்.. அதை எப்படி வெளிப்படுத்துவீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "நான் நேரடியாக போய் சொல்லி விடுவேன்.

ஒருவரை எனக்கு பிடித்திருக்கிறது என்றால் 'உங்களை எனக்கு பிடித்திருக்கிறது' என நேரடியாகவே சொல்லி விடுவேன். சொல்லியும் இருக்கிறேன். அப்படி சொல்லி அவருடன் எனக்கு காதல் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும் போது அவரை காதலித்தேன்.

அவரிடம் நிறைய பேசியிருக்கிறேன். ஆனால், டேட்டிங் சென்றது கிடையாது. செல்போனில் பேசுவதோடு சரி. அதன் பிறகு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்ததால் என்னால் படிப்பை தொடர முடியவில்லை. அதே போல காதலையும் தொடர முடியவில்லை" என்று தெரிவித்துள்ளார்.