தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் லட்சுமிமேனன். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.

வேதாளம் திரைப்படத்தில் தல அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார். இருப்பினும் தற்போது படங்களில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி ரசிகர்களுடன் உரையாடி நேரத்தை கழித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் ரசிகர்களுடன் சாட் செய்த போது ஒருவர் உங்களின் கவர்ச்சி புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டு உள்ளார்.

இதனையடுத்து லட்சுமிமேனன் அந்த ரசிகருக்கு இதுபோன்ற கேள்விகளை கேட்கும் போது கடுப்பாவதாக கூறி உள்ளார். மேலும் F**k என்ற வார்த்தையையும் கூறியுள்ளார்.