மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள சீனியர் நடிகையிடம் மீண்டும் அட்ஜெஸ்ட்மென்ட் பேச்சுவார்த்தைகளில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ஈடுபட்டு வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி கோடம்பாக்கத்தையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளன.
பல வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த அந்த நடிகை வயதான பின்னர் நடித்தால் எந்த அட்ஜெஸ்ட்மெண்ட் தொல்லையும் வராது என நினைத்து தான் மீண்டும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறாராம்.
ஹீரோயினாக அந்த நடிகை நடித்து வந்த போதே அவர் மீது கண் வைத்த அந்த தயாரிப்பாளர் நடிகையை அப்போது மிஸ் பண்ண நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு அந்த சபலம் வந்த நிலையில், தொடர்ந்து நடிகைக்கு தொல்லை கொடுத்து வருவதாக கூறுகின்றனர்.
சினிமாவில் திறமையான நடிகைகளை விட அலங்கார பொம்மைகளாக வெறும் டூயட் பாடலுக்கும் குத்தாட்ட பாடல்களுக்கும் கவர்ச்சி உடைகளையும் மினி டிரெஸ் அணிந்து கொண்டு ஆட்டம் போடும் நடிகைகளுக்கு தயாரிப்பாளர்கள் வாய்ப்பு கொடுப்பதற்கு பின்னணியில் ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் இருப்பதாக கூறுகின்றனர். சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் செய்யப்படும் நடிகைகளை படுக்கை அறைக்கு அழைப்பது உள்ளிட்ட வேலைகளை படத்திற்கு கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டும் ஒரு சில தயாரிப்பாளர்கள் செய்து வருவதாக நடிகைகள் பலரே குற்றம்சாட்டியுள்ள நிலையில், தற்போது சீனியர் நடிகை ஒருவர் தயாரிப்பாளரின் தொல்லை தாங்க முடியாமல் தவித்து வருகிறாராம்.
சினிமாவில் சில ஆண்டுகள் இதுபோன்ற பல தொல்லைகளை சகித்துக் கொள்ள முடியாமல் இந்த தொழிலே வேண்டாம் என ஒதுங்கியிருந்த அந்த நடிகை தற்போது ஒரு சில இயக்குநர்கள் அழைத்ததன் பேரில் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். நடிக்க வந்தவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க தனது பழைய நடிப்பை எல்லாம் ரீ கலெக்ட் செய்து பக்காவாக நடித்து அசத்தி வருகிறார்.
நடிகையிடம் போன் மூலமும், நடிகை ஷூட்டிங்கிற்கு செல்லும் இடங்களுக்கு ஆள் அனுப்பியும் தொல்லை செய்து வந்த அந்த தயாரிப்பாளர் சமீபத்தில் நடிகையின் வீட்டில் ஆள் யாரும் இல்லை என்பதை அறிந்துக் கொண்டு அவர் வீட்டுக்கே சென்று விட்டதாக பகீர் கிளப்புகின்றனர். நடிகைக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கிறேன் என தயாரிப்பாளர் வைத்த டிமாண்டுக்கு நடிகை முடியவே முடியாது என மறுத்து விட்டாராம். அந்த தயாரிப்பாளர் தயாரிப்பில் உருவாக உள்ள படங்களில் நடிக்க வந்த வாய்ப்பையும் தேவையில்லை முதலில் இடத்தை காலி பண்ணு இல்லை என்றால் அசிங்கமாகிடும் என அதட்டிய பின்னர் தயாரிப்பாளர் கிளம்பி சென்றதாக கூறுகின்றனர்.