சினிமாவில் ஒரு நடிகையாக வலம் வருவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை. நடிகை ஆவதற்கு நிறம், உயரம், அழகு, திறமை என அனைத்தும் பக்காவாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் படவாய்ப்பு தேடி வரும் என்பதற்காக சில நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி சர்ஜரி செய்து கொண்ட நடிகைக்கு அது சொதப்பிக்கொண்டதால் தற்போது புலம்பிக்கொண்டு இருக்கிறார்.
உலக ரசிகர்களின் இசைமூச்சான பாப் பாடகரும், நடனப்புயலுமான மைக்கேல் ஜாக்சன் தன் வாழ்நாளில் பல காரணங்களுக்காக மூன்றிற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரிகளை மேற்கொண்டிருக்கிறார். இதற்காக அவர் 30,000 டாலர்கள் செலவு செய்திருக்கிறார். இதன் இந்திய மதிப்பு மட்டும் 21,31,350 ரூபாயாகும். அதே போல நடிகை ஸ்ரீதேவியும் தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டனர்.
இன்னும் சில பிரபலங்கள் முன்னணி அந்தஸ்தை தங்களிடம் இருக்கும் குறைகளை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அதை ப்ளஸ் ஆக மாற்றிக்கொண்டனர். அது சிலருக்கு ப்ளஸாக மாறினாலும், பலருக்கு அது மைனசாக மாறிவிடும். அப்படித்தான் தற்போது ஒரு நடிகையும், சிறியதாக இருந்த தன்னுடைய உதடை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகுப்படுத்த நினைத்தார். ஆனால், அந்த சர்ஜரி விகாரமாக மாறி, நடிகையின் உதடு ஏகத்திற்கு பெரியதாக மாறிவிட்டது.
தற்போது அந்த நடிகை சின்னத்திரையில் பிரபலமான சீரியலில் நடித்து வந்தாலும், படவாய்ப்பு வேண்டும் என்பதற்காக அவர் செய்த உதடு சர்ஜரி அவருக்கே தலைவலியாக மாறி, எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கூட கைநழுவி போயிருக்கிறது. தற்போது நடிகையின் முகத்தை பார்த்து பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர். ரசிகர்கள் அடிக்கும் கிண்டலால் வேதனை அடைந்தாலும், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து படவாய்ப்பை பெற இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.