பொதுவாகவே பெண்கள் ஆண்களுடன் ஒப்பிடும் போது மிகவும் புத்திசாலிகளாகவும் எதிர்காலம் குறித்து சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த பெண்கள் இயல்பாகவே தந்திரம் நிறைந்தவர்களாகவும், மற்றவர்களை ஏமாற்றும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இப்படிப்பட்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்த பெண்கள் தங்கள் நினைத்ததை அடைய வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களின் வசீகரமான பேச்சால் மிகவும் நேர்த்தியான முறையில் நினைத்ததை சாதித்துவிடும் ஆற்றல் இவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கும்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே மிகவும் புத்திகூர்மையுடையவர்களாக இருப்பார்கள்.இவர்கள் வாழ்கை மீதும் எதிர்காலத்தின் மீதும் பிடிப்பற்றவர்கள் போல் தோற்றமளித்தாலும் தக்க சமயத்தில் தந்திரமாக முன்னேறும் தன்மை கொணடவர்களாக இருப்பார்கள். இவர்களை புரிந்து்ககொள்வது மிகவும் கடினமான விடயமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் எந்த விடயத்திலும் மிகவும் தீவிரமாக செயற்படக்கூடியவர்கள். இவர்கள் தந்திரமான திட்டம் போட்டு வெற்றியடைவதில் வல்லலர்கள். இவர்களின் வெற்றிக்காக யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்ற கொள்கையுடையவர்கள்.