நிச்சயம் பெரும்பாலான வீடுகளில் புறா கூடு கட்டியிருக்கும். அதை நாம் பல முறை கண்டு ரசித்திருப்போம். ஆனால், வாஸ்துப்படி, இதை வளர்ப்பது எந்த விதத்தில் நன்மை தராது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மரங்கள், செடிகள், விலங்குகள் மற்றும் பறவைகள் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்திலும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
சில சமயங்களில் நமது வீடுகளில் பறவைகள் கூடு கட்டுவதை பார்த்திருப்போம். அவை பொதுவாக ஜன்னல் ஓரம், கட்டிட இடுக்குகள், ஆள் புழக்கம் இல்லாத பகுதிகளில் பொதுவாக கூடு கட்டும்.
இதை பார்த்து பல முறை நாம் ரசித்திருப்போம். புறா வீட்டில் தன் கூட்டை அமைத்துக்கொண்டால் அது மிகவும் சிறந்தது. இப் புறா லட்சுமி தேவியின் பக்தராக கருதப்படுகிறது. அதனால் தான் வீட்டில் புறா கூடு வைப்பது மங்களகரமானது என கருதப்படுகிறது.
இப்படி புறா கூடு வைப்பதால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் வராது. நிதி நிலமைகளில் சம்பாதிப்பு நன்றாக கிடைக்கும். ஒருவன் தொழில் இல்லாமல் தான் இருப்பான் ஆனால் அவனிடம் பணம் என்பது ஏதோ ஒரு வழியில் வந்து கொண்டு தான் இருக்கும்.
இதை தான் புறா வளர்ப்பது நல்லது என வாஸ்த்துப்படி கூறுகின்றனர். எனவே புறா வளர்ப்பது ஆபத்தானாது இல்லை இதை வளர்ப்பதால் நன்மை மட்டுமே கிடைக்கும்.