கைது செய்யப்பட்ட திருமதி உலக அழகி கரோலின் ஜூரி மற்றும் சுலா பத்மேந்திர இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கருவாத்தோட்டம் பொலிஸாரால் அவர்கள் இன்று மதியம் கைது செய்யப்பட்டிருந்தனர்.
திருமதி இலங்கை அழகிப்போட்டியில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள புஷ்பிகா டி சில்வா, கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் கரோலின் ஜூரிக்கு எதிராக மேற்கொண்டிருந்த முறைப்பாட்டிற்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
திருமதி இலங்கை அழகிப் போட்டியில் புஷ்பிகாவுக்கு மகுடம் சூட்டப்பட்டு சிறிது நேரத்தில் ஜூரி அறிவிப்பொன்றை வௌியிட்டு, வெற்றியாளர் விவாகரத்து ஆனவர் என்பதால் அத்தகைய ஒருவர் இதில் போட்டியிட முடியாது என கூறி இரண்டாவது இடத்தை பெற்றவரே வெற்றியாளர் என அறிவித்து மகுடத்தை பறித்து இரண்டாம் இடம்பெற்ற பெண்ணுக்கு அணிவித்தார்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்ததுடன் பாதிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா, தான் விவாகரத்து ஆனவர் இல்லை என தெரிவித்து பேஸ்புக் பதிவொன்றையும் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், ஜூரியின் இந்த அறிவிப்பு உண்மைக்கு புறம்பானது என அறிவித்த ஏற்பாட்டு குழு, மீண்டும் புஷ்பிகாவை வெற்றியாளராக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
திருமதி உலக அழகி கரோலின் ஜூரிக்கு பொலிஸ் பிணை!
- Master Admin
- 08 April 2021
- (536)

தொடர்புடைய செய்திகள்
- 10 March 2025
- (132)
வயதுக்கு மீறிய இளமையை அனுபவிக்கும் ராசிய...
- 17 March 2024
- (407)
தனலட்சுமி யோகத்தால் பணமழை கொட்டபோகும் மூ...
- 02 February 2021
- (439)
துப்பாக்கிச் சூடு - இளைஞன் வைத்தியசாலையி...
யாழ் ஓசை செய்திகள்
பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
- 14 March 2025
தொடர் மாற்றத்துக்குள்ளாகும் தங்க விலை
- 14 March 2025
இரவு நேர சேவையில் இருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்
- 14 March 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.