சினிமாவிலோ சீரியலிலோ நடிக்க பல பெண்கள் வாய்ப்பு தேடி செல்லும் இடத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் தான் நடக்கும் என்று கூறும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக இதுகுறித்து சினிமாத்துறையில் இருக்கும் பெண்களும் நடிகைகளும் தன்னை படுக்கைக்கு அழைத்த சம்பவங்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் மல்லி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் நடிகை நிகிதா ராஜேஷ்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பகிர்ந்துள்ளார். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தேன். அப்படி நடிக்க ஆரம்பித்து, தமிழில் அருந்ததி சீரியலில் நடித்தேன். அதன்பின் சூரிய வம்சம் இப்போது மல்லி சீரியலில் நடித்தேன். வாய்ப்புக்காக காஸ்டிங் கவுச் பற்றிய கேள்விக்கு, எனக்கு சீரியலில் இப்போது வரை அதுபோல் யாரும் கேட்டதில்லை.
ஆனால் படங்களில் நடிக்க சிலவற்றில் அட்ஜெஸ்ட் பண்ணனும் என்று ஒருமுறை கேட்டிருக்கிறார்கள். அந்தமாதிரியான ஆட்கள் எங்கும் இருப்பார்கள். நாம் அதற்கு ஓகே இல்லை என்று நேரடியாக சொல்லிவிட வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
எனக்கு அவ்வளவு பெரிய பிரச்சனை வந்ததில்லை. அப்படி திடீரென அப்படி கேட்கும் போது அட்ஜெஸ்ட் பண்ண கேட்கும் போது எனக்கு ஷாக்காக இருந்தது. ஆரம்பத்தில் நார்மலாக பேசி, கதை பற்றி கூறினார்கள்.
அதன்பின் இந்தமாதிரி துறையில் இதுபோல இருக்கும் என்று சொன்னதும் அங்கிருந்து கிளம்பி விட்டேன். அப்போது எனக்கு ஒரு மாதிரியானப்பின் அந்த நம்பரை பிளாக் செய்துவிட்டேன். இதுபோல் நடப்பது எங்கும் நடக்கத்தான் செய்கிறது. அப்படி நடந்தால் மீடியாக்களில் தெரியவந்துவிடும்.
அதற்கு விருப்பம் இல்லை என்றால் உடனே அப்பவே சொல்லிவிட வேண்டும் என்றும் அந்த வாய்ப்பு வேண்டாம் சொல்லிட்டு வேறொரு வாய்ப்பு தேடவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதுவும் நோ சொல்வதை ஸ்ட்ராங்காக சொல்லனும் என்று கூறியிருக்கிறார் நடிகை நிகிதா ராஜேஷ்.