நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

அக்குரணை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய பெண் ஒருவரும், ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.