பொதுவாக பெண்களுக்கு எத்தனை உறவுகள் இருந்தாலும் திருமணத்திற்கு பின்னரான வாழ்க்கையில் கணவர் தான் முக்கியம் என்று ஆகிவிடுகின்றது.

ஆனால் அதனை பல ஆண்கள் உணர்வதில்லை, காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள் கூட திருமணத்திற்கு பின்னர் மனைவியை பற்றி குறைகூற ஆரம்பித்துவிடுகின்றனர்.இதனால் திருமண வாழ்க்கை விரைவில் கசந்துவிடுகின்றது. 

கணவன் நீங்க சொல்வதை கேட்கவில்லையா? அப்போ இந்த விடயங்களை கவனீங்க | How To Get Your Husband S Attention

காதல், திருமணம் மட்டுமன்றி, எந்த உறவை எடுத்துக்கொண்டலும் அதை நல்ல முறையில் நடத்த சம்பந்தப்பட்ட இருவருமே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவர் இன்னொருவரின் வார்த்தைகளை மதிப்பதால் மட்டுமே எந்த உறவையும் நீடிக்க முடியும். 

உலகளவில் பெரும்பாலான கணவன்மார்கள், தங்கள் மனைவிக்கு திருமணத்தின் பின்னர் காலம் செல்ல செல்ல  மரியாதை கொடுப்பது குறைந்து விடுகின்றது. இந்த பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். 

கணவன் நீங்க சொல்வதை கேட்கவில்லையா? அப்போ இந்த விடயங்களை கவனீங்க | How To Get Your Husband S Attentionகணவன் மனைவி  இருவரும் அமைதியான மற்றும் இடையூறு இல்லாமல் உரையாடக்கூடிய நேரத்தையும் இடத்தையும் தெரிவு செய்ய வேண்டியது அவசியம்.

 கணவன்-மனைவிக்குள் என்ன பிரச்சனை இருந்தாலும் அதை தங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள முதலில் முயற்சிக்க வேண்டும். எந்தவொரு உறவிலும் பேச்சுவார்த்தை என்பது இன்றியமையாத ஒன்றாகும்.

கணவன் நீங்க சொல்வதை கேட்கவில்லையா? அப்போ இந்த விடயங்களை கவனீங்க | How To Get Your Husband S Attentionமேலும் உங்கள் கணவர் உங்கள் பேச்சைக் கேட்காதபோது அது வெறுப்பாகத்தான் இருக்கும். இதனால் சண்டைகள் வரலாம். ஆனால், இந்த காரணத்திற்காக சண்டை போட்டால் விரிசல் வளருமே அன்றி உறவு மேம்படாது.

எனவே, உங்களுக்கு என்ன பிரச்சனை, அவர் இப்படி செய்வதால் உங்களுக்கு என்ன மாதிரியான உணர்வு ஏற்படுகிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

கணவன் நீங்க சொல்வதை கேட்கவில்லையா? அப்போ இந்த விடயங்களை கவனீங்க | How To Get Your Husband S Attention

இருவருக்குள்ளும் வரும் பிரச்சனையில் எப்படி இருவருக்கும் தொடர்பு உள்ளதோ, அதே போல அதை தீர்பதிலும் இருவருக்கும் பங்கு இருக்கின்றது என்பதை உணர வேண்டும். 

பிரச்சனைகளை தீர்க்க, காது கொடுத்து கேட்கும் பக்குவம் இருவரிடமும் இருக்க வேண்டும். அவர் கூறுவதை முதலில் நன்றாக கேளுங்கள். அவரிடத்தில் உங்களது முழு கவனத்தையும் கொடுங்கள்.

கணவன் நீங்க சொல்வதை கேட்கவில்லையா? அப்போ இந்த விடயங்களை கவனீங்க | How To Get Your Husband S Attention

அப்படி அவர் பேச்சை நீங்க்ள கேட்கும் போது, அவர் மீது நீங்க்ள வைத்துள்ள மரியாதையையும் அன்பும் அவருக்கு புரியும்.

அவரோடு பேசுகையில் கண்ணோடு கண் பாருங்கள், அடிக்கடி தலையசையுங்கள். இப்படி, நீங்கள் முதலில் அவரை மதித்து, அவர் பேசுவதை கேட்கையில் அவருக்கும் நீங்கள் பேசுவதை கேட்க வேண்டும் என்ற எண்ணம் வரும். 

கணவன் நீங்க சொல்வதை கேட்கவில்லையா? அப்போ இந்த விடயங்களை கவனீங்க | How To Get Your Husband S Attention

நீங்கள் தெரிவிக்க விரும்புவதைப் பற்றி நேரடியாகவும் துல்லியமாகவும் இருங்கள். உங்கள் எண்ணங்களைத் தெளிவுபடுத்தி அவற்றைத் தெளிவாக வெளிப்படுத்துங்கள். எந்த பிரச்சனையையும் நீளமாக எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளும் வாக்கியங்களும் குற்றச்சாட்டாகவோ அல்லது மோதலாகவோ இல்லாமல் கவனித்துக் கொள்ளுங்கள். 

கணவன் நீங்க சொல்வதை கேட்கவில்லையா? அப்போ இந்த விடயங்களை கவனீங்க | How To Get Your Husband S Attention

அவருடைய எண்ணங்களைப் பற்றி நீங்கள் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறீர்கள் என்பது அவருக்கு புரிந்தால் அவர் உங்கள் மீது அதே அக்கறையை செலுத்தவும் உங்கள் பேச்சை கேட்கவும் அதிக வாய்ப்புள்ளது.

கணவன் நீங்க சொல்வதை கேட்கவில்லையா? அப்போ இந்த விடயங்களை கவனீங்க | How To Get Your Husband S Attention

எனவே உங்கள் கணவன் மீது உள்ள அக்கறையையும் பாசத்தையும் கோபத்துடன் வெளிப்படுத்தாதீர்கள். கோபமும் பாசம் தான் என்பதை எல்லா ஆண்களும் புரிந்துக்கொள்ள மாட்டார்கள்.