பொதுவாகவே மாறிவரும் உணவு முறை நமக்கு நல்லதைச் செய்கிறதோ இல்லையோ, விதவிதமான நோய்களைக் கைபிடித்து கூட்டிவந்து விடுகிறோம். அவற்றில் முக்கியமான ஒன்று, `பெப்டிக் அல்சர்’ எனச் சொல்லப்படும் வயிற்றுப்புண்.
அல்சர் நோய் வருவதற்கு முதல் காரணம் காலதாமதமாக உணவருந்துதல், முறையற்ற உணவு முறை, கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் உணவுகளை அதிகளவு உட்கொள்வது போன்ற காரணங்களால் இந்த அல்சர் பிரச்சினை ஏற்படுகிறது.
இந்த அல்சர் பிரச்சினை இருப்பவர்கள் டீ குடிக்க கூடாது என்று சொல்வார்கள். ஆனால் இப்படியான ஒரு டீயை தயாரித்து குடித்தால் குடல் புண் மற்றும் இரப்பை புண் காணாமல் போகும்.
கொத்தமல்லி ஒரு கப் எடுத்து மிதமான தீயில் வறுத்து அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு கரண்டி அரைத்த கொத்தமல்லியை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கொதித்த பின்னர் அதில் அதிமதுரம் பொடியையும் சேர்த்த கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக கொதித்த பிறகு வடிகட்டிதேவையான அளவு நாட்டு சக்கரை சேர்த்து குடிக்கவும்.
இந்த டீயை அல்சர் இருப்பவர்கள் காலையில் டீ குடிப்பதற்கு பதிலாக இந்த கொத்தமல்லி டீயை குடித்தால் அல்சர் குணமாகும்.