வேளாண்மை அல்லாத பிற தொழில்களுக்குத் தேவையான இரசாயன பொருட்களை முன் ஒப்புதலுக்குப் பிறகு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஜெனரல் தமயந்தி கருணாரத்ன இதனை தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தொழில்களின் தேவைகளை உறுதிப்படுத்திய பின்னர், எதிர்காலத்தில் அதற்கு தேவையான உரிமங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.