பொதுவாக மனித வாழ்க்கையில் “தூக்கம்” என்பது அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
நீங்கள் ஒரு நாள் தூக்கத்தை தவற விட்டாலும் அடுத்த நாள் முழுவதும் சரியாக வேலைச் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
ஒரு நாள் 1 மணி நேரம் தூங்காமல் இருந்தால் அதனை சரிச் செய்ய சரியாக 4 நாட்கள் எடுக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் ஒரு மணி நேரம் தூக்கத்தை இழந்தால் என்னென்ன பாதிப்புக்கள் ஏற்படும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மூளையின் திறனை அதிகரிக்கும் வேலையை தூக்கம் செய்கிறது. இதனை தவறும் பட்சத்தில் உடலில் இருக்கும் உறுப்புக்கள் செயலிழந்து சோர்வடையும்.
ஒரு நாள் தூங்காமல் இருந்தால் தலைவலி, எரிச்சல், மோசமான முடிவெடுப்பது மற்றும் கவனமின்மை போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. பல நாட்கள் தொடர்ச்சியாக தூக்கத்தை இழந்தால் எதிர்மறையான ஆற்றல்கள் அதிகரிக்கும்.
மேலும் இரவு தூங்கும் பொழுது ஒரு மணி நேரம் தாமதமாக தூங்கினால் அறிவாற்றல் திறன்களில் கணிசமான தாக்கங்களை ஏற்படுத்தும்.
இரவு வேளைகளில் நிம்மதியாக தூங்க நினைப்பவர்கள் உணவு விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உணவுகள் செரிமானத்திற்குள்ளாகும் பொழுது இரவு நேரம் முழுமையான தூக்கம் இருக்காது.
ஒரு சிலருக்கு ஒரு நாள் சரியாக தூங்காவிட்டாலும் அடுத்த எழுந்து நிற்கக் கூட முடியாத நிலை ஏற்படும். உதாரணமாக வீட்டில் இருக்கும் குழந்தைகள் சரியான நேரத்திற்கு உறங்குவது அவசியம். இதனை தவறும் பட்சத்தில் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி, அறிவாற்றல் வளர்ச்சி என்பவற்றில் பாதிப்பு ஏற்படலாம்.
மேலும், வயதானவர்கள் தூக்கமின்மை ஏற்பட்டால் மூச்சுத்திணறல் அல்லது மனநலக் கோளாறுகள் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும்.
இது போன்ற பிரச்சினைகளை தடுக்கும் விதமாக ஒருவர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. பிறந்த குழந்தைகள் (3 மாதங்கள் வரை): 14 முதல் 17 மணி நேரம் தூங்க வேண்டும்.
2. மாதக் குழந்தைகள் (4 முதல் 12 மாதங்கள் வரை): 12 முதல் 16 மணிநேரம் தூங்க வேண்டும்.
3. சிறு குழந்தைகள் (1 முதல் 5 வயது வரை): 10 முதல் 14 மணி நேரம் தூங்க வேண்டும்.
4. பள்ளி வயது குழந்தைகள் (6 முதல் 12 வயது வரை): 9 முதல் 12 மணி நேரம் தூங்க வேண்டும்.
5. பருவமடைந்த பிள்ளைகள் (13 முதல் 18 வயது வரை): 8 முதல் 10 மணி நேரம் தூங்க வேண்டும்.
6. வயது முதிர்ந்தவர்கள் (18 வயது மற்றும் அதற்கு மேல்): 7 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும்