இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது மிகவும் இயல்பான விடயமாகவே காணப்படுகின்றது.

ஆனால் கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை குறிக்கின்றன. கனவில் வரும் சில விடயங்கள் மங்களகரமானதாக கருதப்படும் அதே வேளை சில விடயங்களை கனவில் காண்பது ஆபத்து குறித்து ஆழ் மனம் எச்சரிப்பதாக அமைகின்றது.

பூக்கள் உங்கள் கனவில் அடிக்கடி வந்தா? அப்போ இதெல்லாம் நடக்கப்போகுதுன்னு அர்த்தம் | What Happens When You See Flowers In A Dream

நாம் தூங்கும் போது வரும் கனவுகள் சிலருக்கு நினைவில் இருக்கும். சிலருக்கு இருக்காது. தூங்கும் போது கனவில் பூக்கள் காண்பது கனவு சாஸ்திரத்தின் அடிப்படையில் என்ன பலன்களை கொடுக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பார்த்தவுடன் மனதை ஈர்க்ககூடிய விடயங்களில் பூக்கள் நிச்சயம் இடம்பிடித்துவிடும்.கனவுகளை பொருத்தவரையில் நம்மை மகிழ்ச்சிப்படுத்தக்கூடிய கனவுகளில் பூக்கள் பற்றிய கனவும் ஒன்று.

பூக்கள் உங்கள் கனவில் அடிக்கடி வந்தா? அப்போ இதெல்லாம் நடக்கப்போகுதுன்னு அர்த்தம் | What Happens When You See Flowers In A Dream

கனவு சாஸ்திரத்தின் அடிப்படையில்  கனவில் பூக்களை காண்பது சந்தோஷம், மகிழ்ச்சி, திருப்தியான உணர்வு என்பவற்றின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகின்றது.

பூக்கள் பூத்து குலுங்குவதை கனவில் கண்டால் எதிர்காலத்தில் மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய மாற்றங்கள் ஏற்படும் என அர்த்தம். 

பூக்கள் உங்கள் கனவில் அடிக்கடி வந்தா? அப்போ இதெல்லாம் நடக்கப்போகுதுன்னு அர்த்தம் | What Happens When You See Flowers In A Dream

வாசனை நிறைந்த பூக்களை திருமணமாகாத ஆண்கள் அல்லது பெண்கள் கனவில் கண்டால் அவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும் என்று அர்த்தம். 

ரோஜா தோட்டத்தில்  இருப்பதை போன்ற கனவு வந்தால் எதிர்கால வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க போகின்றது என்று அர்த்தம்.

பூக்கள் உங்கள் கனவில் அடிக்கடி வந்தா? அப்போ இதெல்லாம் நடக்கப்போகுதுன்னு அர்த்தம் | What Happens When You See Flowers In A Dream

கனவில் மல்லிகை பூவை காண்பது வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க இருப்பதை உணர்துவதாக அமையும்.

மஞ்சள் நிற பூக்களை கனவில் கண்டால் வாழ்வில் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல நிகழ்வுகள் அனைத்தும் நடக்க போகின்றது என அர்த்தம்.

பூக்கள் உங்கள் கனவில் அடிக்கடி வந்தா? அப்போ இதெல்லாம் நடக்கப்போகுதுன்னு அர்த்தம் | What Happens When You See Flowers In A Dream

வெள்ளை நிற பூக்கள் அல்லது பூமாலையை மற்றவர்கள் கைகளில் இருந்து பெறுவது போன்ற கனவு வந்தால் விரைவில் நீ்ங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்போகின்றது என அர்த்தம். 

கனவில் வெள்ளை தாமரைக் கண்டால், கல்வியின் கடவுளான சரஸ்வதி தேவியின் ஆசீர்வாதம் கிடைத்துள்ளது என்றும் கல்வி துறையில் வளர்ச்சி காண போகின்றீர்கள் என்றும் அர்த்தம்.

பூக்கள் உங்கள் கனவில் அடிக்கடி வந்தா? அப்போ இதெல்லாம் நடக்கப்போகுதுன்னு அர்த்தம் | What Happens When You See Flowers In A Dream

முல்லை பூவை கனவில் பார்த்ததால் தாய் வழி உறவுகளிடமிருந்து  உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

பூக்கள் நிறைந்த மரம் அல்லது செடிகள் கனவில் கண்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும் என்று அர்த்தம்.