பொதுவாகவே பெண்கள் தங்களை அழகாக காட்டிக்கொள்வதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். முகம் பொலிவாக இருப்பதற்காக பல்வேறு அழகுசாதன பொருட்களையும் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் சிலருக்கு முகம் பொலிவாக இருந்தாலும் கழுத்துப் பகுதியைச் சுற்றி கருமையாகக் காணப்படும்.

ஒரே வாரத்தில் கழுத்து கருமையை போக்கணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Get Rid Of Dark Neck Within One Weekஇது முகத்தின் அழகையும் சேர்த்து கெடுப்பதாக அமையும் இந்த பிரச்சினை நம்மில் பலருக்கும் இருக்கும். இந்த பிரச்சினை பெண்களுக்கிடையில் தாழ்வு மனபான்மையை தோற்றுவிப்பதாகவும் உளவியல் ஆய்வு குறிப்பிடுகின்றது.

எனவே கழுத்தில் உள்ள கருமையைப் போக்க வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இயற்கை முறையில் எவ்வாறு தீர்க்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரே வாரத்தில் கழுத்து கருமையை போக்கணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Get Rid Of Dark Neck Within One Weekகுளிப்பதற்கு முன்பாக சிறிதளவு எலுமிச்சைச் சாறு துளிகளை கழுத்துப் பகுதியில் நன்றாக தடவி 20 நிமிடங்கள் மசாஜ் செய்தால் கழுத்து கருமையில் மாற்றம் ஏற்படும்.

உருளைக்கிழங்கு சாறு அல்லது உருளைக்கிழங்கு பேஸ்டை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் கழுத்தில் காணப்படும் கருமை இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

ஒரே வாரத்தில் கழுத்து கருமையை போக்கணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Get Rid Of Dark Neck Within One Week

தக்காளியை ஒரு துண்டு எடுத்துக்கொண்டு சிறிது சீனி சேர்த்து கழுத்து பகுதியில் 15 நிமிடங்கள் வரை ஸ்க்ரப் செய்வதும் கழுத்து கருமையை போக்க சிறந்த தீர்வாக இருக்கும்.

பாசிப்பயறு மாவு கருமையைப் போக்கி சருமம் பளபளப்பு அடைய வைக்கும் சிறந்த பொருள்.பாசிப்பயறு மாவை குளிக்கும்போது தொடர்ந்து பயன்படுத்திவர கருமை நீங்கும்.

இது இயற்கையானது என்பதால் நாம் பயன்படுத்தும் ஏனைய பொருட்களுடன் எவ்வித ஒவ்வாமையையும் ஏற்படுத்தாது.

ஒரே வாரத்தில் கழுத்து கருமையை போக்கணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும் | How To Get Rid Of Dark Neck Within One Week

அதுபோல, ஓட்ஸ் மற்றும் சிறிது தயிர் சேர்த்து பெக் போன்று கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடங்களின் பின்னர் கழுவலாம், இதுவும் கழுத்து கருமைக்கு சிறந்த பயனை கொடுக்கும்.

இயற்கையாக கிடைக்கும் கற்றாழை ஜெல்லை கழுத்தில் தடவுவதன் மூலமும் கழுத்து கருமையை இலகுவாக போக்க முடியும்.