பொதுவாக தோல் சிவப்பாக இருப்பது சாதாரண விடயம்.

ஆனால் குறிப்பிட்டதொரு இடத்தில் மாத்திரம் சிவப்பாக இருந்தால் அதனை கவனிக்க வேண்டும்.

மூக்கு சிவந்து சிறிது நேரம் கழித்தும் பழைய நிலைக்கு திரும்பாவிட்டால் உடனடியாக மருத்துவரை நாடுவது சிறந்தது.

அந்த வகையில் மூக்கு சிவந்து காணப்படுவதற்கான காரணங்கள், அதனை கண்டறியும் வழிமுறைகள் என்பவற்றை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. வறண்ட சருமத்தில் மூக்கு சிவந்து காணப்படல்

சருமம் வறண்டு காணப்படும் பொழுது மூக்குப்பகுதியிலுள்ள இறந்த செல்கள் படிமங்களாக படிந்து விடும். இவை வெளியிலிருந்து பார்ப்பதற்கு சிவப்பு நிறப்புள்ளிகள் போன்று தோன்றும். செல்கள் வளர வளர இறந்த செல்கள் நீங்கி முகம் பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறது.

மூக்கில் சிவப்பு புள்ளிகள் இருப்பது புற்றுநோயின் அறிகுறியா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | What Causes Of Red Spot On Nose

2. மெலனோமா​

தோல் புற்றுநோயின் இன்னொரு வடிவமாக மெலனோமா பார்க்கப்படுகிறது. இது நிறமி உற்பத்தி செய்யும் உயிரணுக்களிலிருந்து ஆரம்பமாகும் ஒரு வகை நோய்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிவப்பு புள்ளி மூக்கில் இருந்து கொண்டே இருக்கும். காலங்கள் சென்றும் புள்ளிகள் மாறவில்லை என்றால் உரிய மருத்துவரை நாடுவது சிறந்தது.

மூக்கில் சிவப்பு புள்ளிகள் இருப்பது புற்றுநோயின் அறிகுறியா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | What Causes Of Red Spot On Nose

3. முகப்பருக்களுடன் தோன்றல்

பொதுவாக மூக்கின் நுனி மற்றும் பக்கவாட்டில் தடிமனாக இருக்கும். இந்த பகுதியில் எண்ணெய் சுரக்கும் துளைகள் உள்ளன.

இந்த பகுதிகளில் முகப்பருக்கள் இருக்கும். இதனை கையால் காயப்படுத்தவோ அல்லது உடைக்கவோ கூடாது. இரண்டு வாரங்களில் அதுவாகவே மாறி விடும். மாறா விட்டால் உரிய மருத்துவரை நாடுவது நல்லது.

மூக்கில் சிவப்பு புள்ளிகள் இருப்பது புற்றுநோயின் அறிகுறியா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | What Causes Of Red Spot On Nose

4. சிறு வியாதிகள்

குழந்தைகளுக்கு மழைக்காலம் வந்து விட்டால் அதிகமாக சளிபிடிக்க ஆரம்பிக்கும். இந்த காலப்பகுதியில் அவர்களின் மூக்கு சற்று சிவந்து காணப்படும். இந்த நிலைமை காய்ச்சல் சரியானதும் மாறி விடும். மாறாவிட்டால் வேறு ஏதாவது நோயின் அறிகுறியாக இருக்கலாம்.

மேலும் சொறி, ரோசாசியா, லூபஸ், பெரினியோ போன்ற நோய்களின் தாக்கமாகவும் இருக்கலாம்.

மூக்கில் சிவப்பு புள்ளிகள் இருப்பது புற்றுநோயின் அறிகுறியா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க | What Causes Of Red Spot On Nose