பிரேஷில் நாட்டில் 81 வயதான மூதாட்டியின் வயிற்றில் இறந்த குழந்தையின் சலடமான ஒரு எலும்புகூட்டை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.
டேனிலா இவர் எனும் 81 வயதாகும் மூதாட்டியைின் வயிற்றில் அடிக்கடி வலி ஏற்பட்டுள்ளது. இவர் அதை அவ்வளவு பெரிதாக கணக்கெடுக்காமல் அப்படியே விட்டு விட்டு இருந்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் இவருக்கு அதிகப்டியான வலி வந்துள்ளது.
இதையடுத்து இவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மருத்துவர்கள் இவரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.
இவ்வாறு ஸ்கேன் செய்து பார்த்த சந்தர்பத்தில் இறந்த குழந்தை ஒன்றின் சடலலம் அவரின் வயிற்றில் இருந்துள்ளது. இந்த கருவை மருத்துவ முறையில் ஸ்டோன் பேபி என்று குறிப்பிடப்படுகிறது.
இவருக்கு கர்ப்பப்பைக்கு வெளிலே உருவாகி உள்ளது. அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்த ஸ்டோன் பேபி நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஏற்பட்ட தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.