ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.

புதன் புத்திசாலித்தனம், வியாபாரம், படிப்பு, பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

இந்த புதன் அக்டோபர் 01 ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னி ராசிக்கு ஒரு வருடத்திற்கு பின் செல்கிறார்.

சொந்த ராசிக்கு புதன் செல்வது சிறப்பான பலன்களைத் தரும். புதன் பெயர்ச்சியின் தாக்கமானது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும்.

3 ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். 

அக்டோபர் முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கும் தொழில் முன்னேற்றம் ஏற்பட போகுதாம் | October Onwards These 3 Zodiac Career Advancement

மிதுனம்

மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த புதன் அக்டோபர் 01 ஆம் தேதி 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார்.

இதனால் இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

இக்காலத்தில் சரியான இடத்தில் முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறலாம்.

வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

பரம்பரை சொத்துக்களால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியுடன் முன்னேற்றமும் ஏற்படும். 

அக்டோபர் முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கும் தொழில் முன்னேற்றம் ஏற்பட போகுதாம் | October Onwards These 3 Zodiac Career Advancement

தனுசு

தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் திருமணமானவர்கள் வாழ்க்கை அக்டோபர் 01 முதல் மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.

வியாபாரம் செய்பவர்கள் புதனின் அருளால் நல்ல லாபத்துடன், வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.

இக்காலத்தில் மேற்கொள்ளும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும்.

அக்டோபர் முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கும் தொழில் முன்னேற்றம் ஏற்பட போகுதாம் | October Onwards These 3 Zodiac Career Advancement

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார்.

இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.

புதிய வருமான ஆதாரங்களைப் பெற வாய்ப்புள்ளது.

சமூகத்தில் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இதுவரை முதலீரை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல பலனைப் பெறலாம்.

குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது.