விஜய்சேதுபாதியின் பெயர் சொல்லும் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விவாதிக்கத் தொடங்கியிருக்கும் படம 'க/பெ ரணசிங்கம்'. விருமாண்டி இயக்கத்தில் கிராமியப் பொருளாதாரத்தை நசுக்கும் கார்ப்பரேட்டுகளை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்னர்.
படத்தின் தூண்டல் முன்னோட்டக் காணொளி(டீசர்) வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படம் பற்றி மற்றொரு சுவாரஸ்யமான தகவல், இதில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது.
தூண்டல் முன்னோட்டக் காணொளியைப் பார்த்தால், அதில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பத்தில் பவானி ஒரு உறுப்பினராக நடிப்பதைத் தெரிந்துகொள்ள முடியும். பவானி ஏற்கனவே தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனின் மனைவியும் முன்னாள் நாயகியுமான அமலா அக்கினேனியின் ‘High Priestess’ இணையத் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ், அவரது மனைவி பாடகர் சைந்தாவி இருவரும் தங்கள் சமூக வலைதளங்களில் பவானியை குறித்து பெருமையுடன் பதிவிட்டுள்ளனர்.