இன்று புதன் பெயர்ச்சி ஆரம்பமாகியுள்ள நிலையில், பணமழையில் நனைந்து ராஜயோகத்தை அடையும் ராசியினரைக் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
பொதுவாக கிரகங்களின் பெயர்ச்சியின் போது சில ராசிகளுக்கு யோகமாக அமையும். ஜோதிடத்தில் சந்திரனுக்கு அடுத்தபடியாக வேகமாக பயணிக்கும் கிரகம் புதன் ஆகும்.
கிரகங்களின் அதிபதியான புதன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் ஒரு மாத காலம் எடுத்துக் கொள்ளும் நிலையில், இன்று புதன் கிரகம் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளார்.
இத்தருணத்தில் பணமழையில் நனைந்து ராஜயோகத்தை அடையும் 3 ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாற்றம் (Budh Gochar 2024) நன்மை பயக்கும். ஏனெனில் புதன் கிரகம் உங்கள் ராசியின் வருமானம் மற்றும் லாபம் தரும் இடத்தில் பார்வையடையப் போகிறார்.
எனவே, இந்த நேரத்தில் உங்கள் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும். புதிய வருமானம் மூலம் அதிகளவு பணத்தையும், வெற்றியையும் பெறுவீர்கள். இந்த நேரத்தில், அலுவலகத்தில் உங்கள் மூத்த அதிகாரிகளுடன் உங்கள் ஒருங்கிணைப்பு நன்றாக இருக்கும். உங்கள் வேலையை மக்கள் பாராட்டுவார்கள்.
இதன் மூலம், உங்கள் வாழ்க்கையில் வெற்றிக்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். முதலீடு மூலம் நல்ல லாபத்தை பெறுவீர்கள், வாழ்க்கையில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். இது தவிர, பங்குச் சந்தை, பந்தயம், லாட்டரி போன்றவற்றிலும் லாபம் பெறலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு (Cancer Zodiac Sign) புதனின் பெயர்ச்சியால் தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். ஏனெனில் உங்கள் ராசியிலிருந்து கர்ம வீட்டில் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. எனவே, இந்த பெயர்ச்சி காலத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் நல்ல செய்திகளை நீங்கள் பெறுவீர்கள்.
உங்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த நேரத்தில், வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், இந்த நேரத்தில் வர்த்தகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தலாம். இந்த நேரத்தில், புதிய ஆர்டர்களைப் பெறுவது நல்ல லாபத்தைத் தரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாற்றம் சாதகமாகவே இருக்கும். ஏனெனில் உங்கள் ராசியிலிருந்து ஐந்தாம் வீட்டில் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் உங்கள் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். அதாவது, பிள்ளைகளுக்கு திருமணம் ஆகலாம் அல்லது வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.
இந்த நேரத்தில், அனைத்து குடும்ப உறுப்பினர்களுடனும் நல்ல உறவு இருக்கும். நிதி உதவி பெறலாம். மேலும், இந்த நேரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும்.