மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

நேற்று அவர்கள் வழக்கம்போல் காலையில் கல்லூரிக்கு வந்தனர். ஆனால் கல்லூரி திறக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பு தெரியவந்ததால் கல்லூரி மூடப்பட்டிருக்கும் தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் ஜார்ஜ் கூறுகையில், ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு சிலருக்கு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் மாணவ- மாணவிகளின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி மூடப்பட்டுள்ளது. இருப்பினும் இணைய தள வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும். வருகிற 22-ந்தேதி கல்லூரி மீண்டும் திறக்கப்படும் என்றார்.