பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளம்.
சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒரு மனிதன் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்றால் அவனிடம் நிச்சயம் இருக்க வேண்டிய குணங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
நெருக்கடியான நிலையில் அமைதி
சாணக்கியரின் கூற்றுப்படி வாழ்வில் கடினமான சூழ்நிலை ஏற்படும் போது அமைதியாகவும் பெறுமையாகவும் இருப்பவர்கள் புத்திசாலிகள். இவர்களின் இந்த குணம் வாழ்வில் சாதிக்க பெரிதும் துணைப்புரியும். என்ன செய்வதென்றே தெரியாத சூழ்நிலையில் மனம் குழப்பத்தில் இருக்கும் இந்த நேரத்தில் எந்த முடிவையும் எடுக்காமல் அமைதி காப்பது பல பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
தவறு செய்யாமல் இருப்பவர்கள்
சாணக்கியரின் கொள்கையின்படி, தவறுகளில் இருந்து தன்னை தானே விலக்கிக்கொள்ளும் தன்மை கொண்டவரை் தான் ஞானி. பகுத்தறிவின் படி சிந்தித்து தவறு செய்யாமல் இருப்பவர்கள் வாழ்வில் நிச்சயம் உயர்ந்த நிலையை அடைந்தே தீருவார்கள்.
எதிர்கால திட்டங்களில் ரகசியம்
எதிர்காலத் திட்டங்கள் குறித்து முன்கூட்டியே யாரிடமும் பகிர்ந்துக்கொள்ளாமல் இருப்பது மிகுந்த புத்திசாலித்தனம் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார். நினைத்த காரியத்தை முடிக்கும் முன்னர் தனது திட்டங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதால் திட்டங்கள் நடக்காமல் போவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
இலக்கில் கவனம் செலுத்துவது
மனதில் இலக்கை நிர்ணயித்து அதனை அடைவதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்களை சாணக்கியர் அறிவாளிகள் என்கின்றார்.இலக்கை அடைய நேரத்தையோ, சூழ்நிலையையோ காரணம் காட்டாதவர்கள் நிச்சயம் வெற்றியடைந்தே தீருவார்கள்.
தடைகளை கடக்கும் திறன்
சாணக்கியரின் கூற்றுப்படி தடைகளை கண்டு பயப்படாதவன் சிறந்த புத்திசாலியாக இருக்கின்றார். இவர்களுக்கு எத்தனை தடைகள் வந்தாலும் அவர்களின் முழு கவனமும் அவர்ளின் சிறந்த நோக்கத்தின் மீது தான் இருக்கும்.இந்த குணம் கொண்டவர்களை வெல்லும் சக்தி இவ்வுலகில் இல்லை என்கின்றார்.