வெயில் காலம் என்றால் எல்லோருக்கும் வியர்வை என்பது கண்டிப்பாக வரும். இந்த வியர்வை சிலருக்கு தாங்க முடியாத துர்நாற்றத்தை கொடுக்கும்.

இந்த நாற்றத்தை போக்க பலர் பல விலையுயர்ந்த வாசனை பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு பொருளும் உள்ளது.

அது தான் படிக்கார கல் இந்த படிக்கார கல்லை பயன்படுத்துவதால் என்ன பயன்களை நமக்கு தரும் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

வியர்வை நாற்றத்தை அடியோடு இல்லாமல் செய்யணுமா? அதற்கு இந்த ஒரு கல் போதும் | Crystal Stone That Deodorizes Sweat Hygiene

வியர்வை நாற்றம் என்பது நம்மிடம் அதிகமாக வந்தால் நெருங்கியவர்கள் கூட நம்மை விட்டு விலகிச் செல்ல வழி வகுக்கும்.

இதற்காக நீங்கள் பல வாசனை திரவியங்களை விலைகொடுத்து வாங்க தேவை இல்லை.

வியர்வை நாற்றத்தை அடியோடு இல்லாமல் செய்யணுமா? அதற்கு இந்த ஒரு கல் போதும் | Crystal Stone That Deodorizes Sweat Hygiene

விலை குறைவான இந்த படிக்கார கல்லை கொஞ்சமாக எடுத்து அதில் கொஞ்சம் நீர் ஊற்றி அதை வியர்வை வரக்கூடிய இடங்களில் தெளித்தால் அது வியர்வை நாற்றத்தை வர விடாது.

இதை தவிர இந்த கல் பாத வெடிப்பிற்கு தீர்வாகவும் பயன்படுகிறது. தினமும் தூங்க போவதற்கு முன்பு வெடிப்பு உள்ள இடத்தில் படிகாரக் கல்லை நன்றாக மசாஜ் செய்து வந்தால் சில நாட்களிலேயே கால்களில் உள்ள வெடிப்பு மறைந்துவிடும்.

வியர்வை நாற்றத்தை அடியோடு இல்லாமல் செய்யணுமா? அதற்கு இந்த ஒரு கல் போதும் | Crystal Stone That Deodorizes Sweat Hygiene

சிலருக்கு நகச்சுத்தி வந்து அது மிகவும் வேதனையை கொடுக்கும் அந்த நேரத்தில் படிக்கார கல்லை அரைத்து நகச்சுத்தி உள்ள இடத்தில் பூசினால் நகச்சுத்தி குணமாகும்.

பல் துலக்கியும் வாயில் துர்நாற்றம் வீசுபவர்கள் இந்த படிக்கார கல்லை பல்துலக்கும் போது பயன்படுத்தலாம். இந்த கல் கலந்த நீரால் வாய் கொப்பளிக்க தொண்டை புண் குணமாகும்.

வியர்வை நாற்றத்தை அடியோடு இல்லாமல் செய்யணுமா? அதற்கு இந்த ஒரு கல் போதும் | Crystal Stone That Deodorizes Sweat Hygiene

படிகாரப் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டால் சிறிது நேரத்தில் இருமல் சரியாகிவிடும். அது போல் தலையில் உள்ள பொடுகு நீங்க, படிகாரம் கலந்த தண்ணீரில் முடியை கழுவினால் தலையில் உள்ள பொடுகு, அழுக்கு நீங்கிவிடும்.