பொதுவாக கருட பஞ்சமி வருடாந்தம் ஆகஸ்ட் 02 ஆம் தேதி செவ்வாய்க்கிழமைகளில் வரும். இந்த நாளானது கருட பஞ்சமி என அழைக்கப்படுவதற்கு முக்கிய காரணம், தீராத தோஷங்கள் இருந்தால் இந்த நாட்களில் பரிகாரங்கள் செய்து நீக்கி விடலாம்.
புராணங்களின் படி, கருடன் ஒருவரை நாக தோஷங்களில் இருந்து விடுவிக்கும் சக்தியைக் கொண்டவராக பார்க்கப்படுகின்றார்.
கருட பஞ்சமி அன்று கருடணை மகிழ்விக்க கருட காயத்ரி மந்திரம், கருட தண்டகம், கருட கவசம் போன்றவற்றை சொல்வது நல்லது.
அந்த வகையில், கருட பஞ்சமி என்ன செய்ய வேண்டும்? என்னென்ன தோஷங்கள் இருக்கின்றது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
கம்!கணபதயே! நமஹ! ஓம்! ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ!
ஓம்! நமோ! பகவதே! வாசுதேவாயா! ஓம்! ஹாம்!
ஹனுமதே! ஸ்ரீராம தூதாய நமஹ!
ஓம் தத்புருஷாய வித்மஹே ஸுவர்ண பக்ஷாய தீமஹி தன்னோ கருட பிரச்சோதயாத்...!!
இந்த மந்திரங்களை தினமும் 108 முறை சொல்லி வந்தால், கருடனின் அருள் கிடைக்கும்.
கருட மந்திரம் உச்சரிப்பதன் பலன்கள்
1. இந்த கருட மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஆகவே தோஷங்கள் உள்ளவர்கள் இது போன்ற நாட்களில் உச்சரிக்கும் பொழுது நிச்சயம் பலன் கிடைக்கும்.
2. சனி தோஷங்கள் நிவர்த்தி செய்வதற்கு 7 வருடங்கள் காத்திருப்பவர்கள் இது போன்ற நாட்களில் கருட மந்திரம் உச்சரிப்பது நல்லது.
3. கருட மந்திரத்தை ஒருவர் சுக்ல பக்ஷத்தின் வளர்பிறை பஞ்சமி திதி தொடங்கி, தினமும் 1008 முறை என 108 நாட்கள் சொல்லி வந்தால், அந்நபர் 12 தலைமுறைக்கான சித்தியைப் பெறலாம் என நம்பிக்கையும் இருக்கின்றது.
4. நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு தோஷம், கேது தோஷம் துரதிர்ஷ்டங்களில் இருந்து விடுபட்டு சுக வாழ்வு வாழலாம்.
5. நல்ல ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள் என வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் நிறைவுடன் கிடைக்கும்.