கோடை காலம் வந்தாலே நீர்க்கடுப்பு பிரச்சினை ஏற்படுவது பலருக்கும் வாடிக்கையாக உள்ளது. இதற்கு உடனடி நிவாரம் எவ்வாறு பெறுவது என்பதை தெரிந்து கொள்வோம்.

கோடை காலம் வந்துவிட்டாலே வெயில் அதிகமாகி மக்களை பெரும் அவதிக்குள்ளாக்குகின்றது. உடம்பில் உள்ள நீர்ச்சத்துக்கள் வேகமாக வெளியேறுவதால் உடல் உஷ்ணம் அடைந்துவிடுகின்றது.

இதனால் நீர்க்கடுப்பு பிரச்சினை ஏற்படுகின்றது. அதிலும் இரவு நேரங்களில் இந்த நீர்க்கடுப்பு பிரச்சினை ஏற்பட்டு தூக்கத்தையும் கெடுத்துவிடுகின்றது.

நீர்க்கடுப்பு பிரச்சினையால் அவதியா? உடனடி நிவாரணம் பெறலாம் | Urinal Infection And Pain In Heavy Summerநீர்க்கடுப்பு பிரச்சினை ஏற்பட்டுவிட்டால் 2 சொம்பு தண்ணீரை முழுவதுமாக குடிக்க வேண்டும். பின்பு சிறிது நேரத்தில் சிறுநீர் கழிக்க தோன்றும், அப்பொழுதும் அந்த எரிச்சல் இருக்கும். அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சல் அடங்கி உஷ்ணமும் குறைந்துவிடும்.

நீர்க்கடுப்பு பிரச்சினையால் அவதியா? உடனடி நிவாரணம் பெறலாம் | Urinal Infection And Pain In Heavy Summerஇதே போன்று உள்ளங்கை நிறைய வெந்தயம் எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டு பின்பு ஒரு சொம்பு தண்ணீர் குடித்தால் நீர்க்கடுப்பு பிரச்சினை சில நிமிடங்களில் சரியாகிவிடும்.

வெயிலில் வேலை செய்துவிட்டு வருபவர்கள் மாலையில் குளித்த பின்பு சில மணி நேரம் கழித்து இளநீர் அல்லது நீர் மோர் அருந்த வேண்டும். இவை நாக்கில் எச்சில் சுரப்பை தூண்டி நீர்ச்சத்தை தக்க வைக்கும்.

தினசரி அடிக்கடி தண்ணீர் குடித்து வந்தாலே நீர்க்கடுப்பை சமாளிக்கலாம்.