67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசுரன் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது டி இமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பார்த்திபன், தயாரித்து, இயக்கி, நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு ஜூரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்த செருப்பு படத்தில் பணியாற்றிய ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிப்பதிவாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.