பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.
அதுபோலவே எண்கணித ஜோதிடத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுகின்றது.
அந்த வயைில் எந்த திகதிகளில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றும் விசேட அம்சங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எண் 4 : ( 4, 13,22,31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள்)
இந்த திகதிகளில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே தலைமைத்துவ பண்பு அதிகமாக காணப்படும். யார் தடுத்தாலும் அவர்கள் தங்களின் இலக்கை நோக்கி நிச்சயம் பயணித்துக்கொண்டே இருப்பார்கள்.
விமர்சணங்களை கையாள கற்றுக்கொணட்டால் இவர்களை வெற்றி தேடி வரும். வாழ்வில் உயர்த்த இலக்குகளை கொண்டிருப்பவர்கள் இந்த திகதிகளில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
எண் 9 : ( 9,18,27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள்)
9 என்ற எண்ணே வெற்றியை அடைய தேவையான அதிர்ஷ்டத்தை வழங்கும் தன்மை கொண்டதாக இருப்பதால் இவர்கள் வாழ்வில் நினைத்ததை நிச்சயம் சாதித்தே தீர்வார்கள்.
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மிகவும் நேர்மையான குணமுடையவர்களாகவும் விடாமுயற்சியுடையவர்களாகவும் இருப்பார்கள்.
எண் 1 : (1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள்)
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே தைரியசாலிகளாகவும் லட்சிய வாதிகளாகவும் இருப்பார்கள். இவர்களின் இந்த குணத்தால் நிச்சயம் வெற்றி அடைந்தே ஆவார்கள்.
எப்போதும் சுதந்திரத்தை விரும்பும் இவர்கள் உயர்ந்த இலக்குகளை கொண்டவர்களாக இருப்பார்கள்.
எண் 6 : ( 6,15,24 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள்)
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் தெழில் விடயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் வாழ்க்கை முழுவதும் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். எந்த விடயத்திலும் தங்களின் கடின உழைப்பால் முன்னேற வேண்டும் என நினைப்பார்கள். இவர்களின் இந்த குணத்தால் இவர்களை வெற்றி தேடி வந்தே ஆகும்.
எண் 3 : (3,12,21,30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் )
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே படைப்பாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களின் உயர்ந்த இலக்கு மற்றும் விடாமுயற்சியால் நினைத்த விடயத்தை சாதித்தே ஆவார்கள். பல தடைகளையும் கஷ்டங்களையும் தாண்டி வாழ்வில் வெற்றியை சந்திப்பவர்கள் இவர்கள் தான்.