பொதுவாகவே அனைவருக்கு தெரிந்த சில விடயங்கள் உண்மையா இல்லையா என்ற குழப்பம் தொன்று தொட்டு இருந்துக்கொண்டே இருக்கும். 

அப்படிப்பட்ட விடை தெரியாத விடயத்தில் ஒன்று தான் பாம்புகள் பழிவாங்கும் என்ற கருத்தும். இந்த விடயத்தில் எந்தளவு உண்மையிருக்கின்றது என இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம். 

பாம்புகள் பழி வாங்கும் என்பது உண்மையா? அறிவியல் ஆய்வு தகவல்! | Truth Behind Snakes Take Revenge

தமிழ் சினிமாவிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் பாம்புகள் பழி வாங்குவது போன்ற காட்சிகளை ஒளி பரப்புகிறார்கள். உண்மையில், பாம்புகள் பழிவாங்குமா என எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா? 

அறிவியலின் அடிப்படையில் பாம்புகள் யாரையும் பழிவாங்குவதும் இலலை வேண்டும் என்று தீண்டவதும் இல்லை. உண்மையில் பாம்புகள் மிகவும் சாதுவானது. மனிதர்களை கண்டு பயந்து ஒதுங்கி போகவே விரும்பும்.

பாம்புகள் பழி வாங்கும் என்பது உண்மையா? அறிவியல் ஆய்வு தகவல்! | Truth Behind Snakes Take Revenge

அது போகும் பாதையை மறைப்பது, அதனை தாக்குவது போன்ற செயல்களில் பாதுகாத்துக்கொள்வதற்காகவே பாம்பு சில சமயங்களில் மனிதர்களை கடிக்கின்றது. 

தனது துணையை யாராவது கொன்றுவிட்டால் இன்னொரு பாம்பு பழிவாங்க வரும் என்ற கருத்து முன்னைய காலத்தில் இருந்தே நிலவிவருகின்றது. 

 தனது ஜோடி பாம்பு கொல்லப்பட்ட இடத்தில் மற்றொரு ஜோடி பாம்பு சுற்றிக் கொண்டே இருக்கும்.

பாம்புகள் பழி வாங்கும் என்பது உண்மையா? அறிவியல் ஆய்வு தகவல்! | Truth Behind Snakes Take Revenge

இது  பழிக்கு பழி வாங்குவதற்காக வந்திருக்கின்றது என்ற கருத்து நிலவினாலும் உண்மையில் பாம்புகளின் பிறப்பு உறுப்புகளுக்கு அருகில் இருக்கும் சுரப்பி, அவற்றைக் கொல்லும் போது பல முறை வெடிக்கிறது. அதனால் ஒரு அற்புதமான வாசனை வெளியாகின்றது.

குறித்த வாசனையை மற்ற பாம்புகளை ஈர்க்கும் தன்மை கொண்டத. அதன் காரணமாகவே ஒரு பாம்பு இறந்த பிறகு, பெண் பாம்புகள் அந்த இடத்தில் அடிக்கடி உலாவுகின்றன. 

பாம்புகள் பழி வாங்கும் என்பது உண்மையா? அறிவியல் ஆய்வு தகவல்! | Truth Behind Snakes Take Revenge

இந்த சுரப்பியில் இருந்து வெளிப்படும் வாசனை பெண் பாம்புகளை அதிகமாக பாதிக்கும். ஆனால் அதை  கொன்றவரை பழி வாங்குவதற்காக மற்ற பாம்பு வந்திருப்பதாக கிராமபுற மக்கள் நம்புகின்றார்கள்.

அத மாத்திரமன்றி பாம்புகளால் எதையும் நீண்ட நேரம் நினைவில் வைத்திருக்கும் முடியாது. ஏனைய உயிரினங்களுடன் ஒப்பிடும் போது பாம்புகளுக்கு நினைவாற்றல் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

பாம்புகள் பழி வாங்கும் என்பது உண்மையா? அறிவியல் ஆய்வு தகவல்! | Truth Behind Snakes Take Revenge

எனவே பாம்புகள் பழிவாங்கும் என்பது அறிவியல் ஆதாரமற்ற ஒரு கட்டுக்கதையாகவே இருக்கின்றது. அதில் எவ்வித உண்மையும் ஆதாரமும் இதுவரையில் இல்லை.