யாழ்ப்பாண நகரப் பகுதியில் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் நெடுந்ததூரப் போக்குவரத்தில் இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியால் உள்நுழைவது மற்றும் வெளிச்செல்வது மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், நடைமுறைகளை மீறுவோர் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
அத்தோடு, வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுந்துர பேருந்து நிலையத்திற்குச் சென்று தமது பயணங்களை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.