திருமணம் செய்துகொள்வது எல்லா மதத்திலும் வழக்கமாக இருந்தாலும் இந்து மதத்தில் தாலி முக்கியம் பெறுகின்றது. திருமணத்திற்கு முதன்மையும், முத்திரையும் ஆனதுதான் தாலி.
பெண்கள் கழுத்தில் ஆண் மகன் இரு உறவினர்கள் முன்னிலையிலும் மற்றும் ஊரார் முன்னிலையிலும் கட்டவது தான் தாலி. இதை மஞ்சள் கயிற்றில் தான் கட்டுவார்கள்.
சிலர் தங்க சங்கிலியிலும் கட்டி கொள்வார்கள். இது பல காரணங்களுக்காக திருமணத்தின் போது கட்டுவார்கள். அந்த வகையில் திருமாங்கல்யத்தில் ஏன் கருகு மணி சிவப்பு மணி போடுகிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்றைய தலைமுறையினருக்கு தாலியில் ஏன் கருகு மணி சிவப்பு மணி போடுகிறார்கள் என்பது தெரியாது. தாலியை மஞ்சள் கயிற்றில் போடுவதை நாம் பார்த்திருப்போம். தாலியில் பல வகைகள் உள்ளன.
அதில் பொட்டு தாலி சிவலிங்கம் தாலி சிறுதாலி பெரு தாலி என்று அவரவர் குல வழக்கத்தின் படி தாலி கட்டப்படுகின்றது. பவளத்திற்கு இயற்கையாக ரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தும் சிறப்பு உள்ளது.
தாலி கட்டப்படுவதற்கான காரணம் அந்த தாலியை யாருக்காக கட்டுகிறார்களோ அவர்களின் ஆயுளுக்கு எந்த வித குறையும் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் இருப்பதற்காக தான்.
அந்த வகையில் திருமாங்கல்யத்தில் பவளத்தை சேர்த்து கட்டினால் ஆரோக்கியம் கூடி வரும். ஜோதிடப்படி பவளத்தை குறிக்கும் கிரகம் செவ்வாய் கிரகமாகும்.
பெண்களின் ஜாதகத்தில் கணவனை குறிப்பது செவ்வாய் தான். எனவே தான் தாலியில் கணவன் தன்னுடன் இருக்க வேண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தாலியில் பவளம் சேர்த்து கட்டுகிறார்கள்.
எனவே பவளத்தை அணிந்து கொண்டால் கணவன் மனைவியுடன் அன்பாகவும் நெருக்கமாகவும் இருப்பாராம். இந்த பவளம் தான் சிவப்பு மணி போல இருக்கும். அடுத்து கருகு மணி இதை சிலர் அவர்களின் தாலியில் அணிந்திருப்பார்கள்.
இதற்கு காரணம் கண்திருஷ்டி படக்கூடாது என்பது தான். தங்கம் குருவை குறிக்கும் பளவம் செவ்வாயை குறிக்கும் கருகு மணி என்பது சனிபகவானை குறிக்கும்.
எனவே இது மூன்றும் தாலியில் அமைந்திருக்கும் போது இறைவனை வழிபட்டால் நமது கரும வினைகள் நீங்கி ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் பெருகும் என்பது ஐதீகம்.
திருமாங்கல்யம் என்பது கணவனின் கற்பொழுக்கம் இந்த திருமாங்கல்யம் என்பது குரு கயிறு என்பது கேது இந்த எனவே திருமாங்கல்யம் எப்போது மஞ்சள் கயிற்றில் இருந்து மாற்றம் பெறுகிறதோ அப்போது நீங்கள் கேதுவின் அம்சத்தை அப்படியே எடுத்துக்கொள்கிறீர்கள் என அர்த்தம்.
அடிக்கடி பெண்கள் தாலியை கழற்ற கூடாது. அப்படி களற்றுவதால் உங்களுடைய கணவர் கற்பு நெறியில் இருந்து தவிறி விட்டார் என நினைத்துக்கொள்ளுங்கள்.
இதன்போது கணவனும் மனைவியும் கேதுவின் கட்பாட்டிற்கு தள்ளப்படுவீர்கள். இதனால் தான் விவாகரத்துகளும் நடைபெறுகின்றது. பல கணவன் மனைவி பிரிகின்றனர் என ஜோதிட ரீதியாக கூறப்படுகின்றது.