உடல் எடை அதிகமாக இருக்கிறது என்ற பிரச்சனை உள்ள இந்த காலத்தில் தற்போது எவ்வளவு சாப்பிட்டாலும் வயதிற்கேற்ற உடல் எடை இல்லாதவர்களும் காணப்படுகின்றனர்.
உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்றால் நாம் அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் எப்படியான உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல் தசைகளின் வளர்ச்சிக்கு நாம் கட்டாயமாக அன்றாட உணவில் புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
நாம் உண்ணும் உணவுகளில் பால், தயிர், சீஸ், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் போன்ற உணவுகளில் இதுபோன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. இதன் மூலம் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
உடல் அமைப்பு மிகவும் மெலிவாக உள்ளவர்கள் உலர் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இந்த உலர் பழங்களில் கலோரிகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
எனவே இதை உணவாக எடுத்து கொள்வது மிகவும் அவசியம். எடை வேகமாக அதிகரிக்க நட்ஸ் வெண்ணெய் சாப்பிடலாம். இதில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது.
இவற்றை உட்கொள்வதால் உடலில் உள்ள கலோரிகள் அதிகரித்து எடை வேகமாக கூடும். இது எடை அதிகரிப்பிற்கு மட்டுமல்லாமல் உடல் ஆற்றலுக்கும் நன்மை தரும்.
உடல் எடை அதிகரிப்பிற்கு குறிப்பிட்ட சில பழங்கள் பங்களிக்கின்றன. அவை வாழைப்பழம், சப்போட்டா, பப்பாளி, சீத்தாப்பழம், கொய்யா மற்றும் அத்திப்பழம் ஆகியவற்றை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.
இந்த பழங்களில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சோளம், கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு பலவீனமும் நீங்கும்.