எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன.
இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும். ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது. அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும்.
எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் என்ன தான் கட்டிப்போட்டு வைத்தாலும் காதல் திருமணம் தான் செய்வார்கள். அப்படியான எண்களில் பிறந்தவர்கள் யார் யார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
எண் 6 | எண் 6 பிறந்தவர்கள் அதிக பொறுப்புள்ளவர்கள், குடும்ப நலன் சார்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் உறவுகள் நல்லிணக்கத்துடன் நடந்து கொள்வார்கள். ஆழமான காதல் பிணைப்பு இருக்கும். திருமணம் குறித்து எந்தவித சந்தேகமுமின்றி காதல் திருமணம் செய்து கொள்ள முனைவார்கள். |
எண் 8 | எண் 8 பிறந்தவர்கள் சாதனை, அதிகாரம் மற்றும் செழிப்பு உள்ளிட்டவைகளுடன் இணைக்கப்பட்டவர்களாக காணப்படுவார்கள். தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். எப்போதும் அவர்களின் குறிக்கோள்கள் மற்றும் தொழில் போன்றவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். காதல் திருமணத்தை உறவுகள் சம்பதத்துடன் செய்து கொள்வார்கள். இவர்கள் காதலிப்பதை விட தனிப்பட்ட முன்னேற்றத்தில் அதிகமான அக்கறை காட்டுவார்கள். |
எண் 4 | எண் 4 வரும் திகதிகளில் பிறந்தவர்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டவர்களாக காணப்படுவார்கள். பார்க்கும் போது புதுமை மற்றும் உற்சாகத்துடன் இருப்பார்கள். காதல் திருமணங்கள் செய்ய அதிக விருப்பம் காட்டுவார்கள். இவர்களின் திருமணம் மகிழ்ச்சி கொடுக்கிறதோ இல்லையா? ஆனால் மன நிறைவுக் கொடுக்கும். |