கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலம்பெற்று மீண்டுவர வேண்டும் என, சினிமா பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், இரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்வதனர்.

இந்நிலையில், அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவருக்கு, செயற்கை சுவாச உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.