2025ஆவது ஆண்டிற்கான உலகிலேயே சக்திவாய்ந்த passport தரவரிசை வெளியாகியுள்ளது.

அந்த வகையில், இந்த பட்டியலில் முதல் 10 இடங்களை பற்றி பார்க்கலாம்.

சிங்கப்பூர் உலக நாடுகளில் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் வாய்ப்பு பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.
தென்கொரியா  190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் வாய்ப்பை வழங்குகிறது.
ஜப்பான்  189 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் அதிர்ஷ்டத்தை பயணிகளுக்கு வழங்குகிறது.
ஜெர்மனி, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஜெர்மனி, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின், சுவிட்சர்லாந் ஆகிய நாடுகளின் passport நான்காவது இடத்தை பிடிக்கிறது. இதனை பயன்படுத்தி 188 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வழங்கப்படும் passport-ஐ பயன்படுத்தி 187 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
கிரீஸ், ஹங்கேரி, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், ஸ்வீடன் கிரீஸ், ஹங்கேரி, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், ஸ்வீடன் ஆகிய நாடுகளில் வழங்கப்படும் passport 6 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த passport-ஐ பயன்படுத்தி 186 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, செக்கியா, மால்டா, போலந்து ஆஸ்திரேலியா, செக்கியா, மால்டா, போலந்து ஆகிய நாடுகளின் passport 7வது இடத்தை பிடிக்கிறது. இந்த passport-ஐ பயன்படுத்தி 185 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். 
குரோஷியா, எஸ்டோனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய இராச்சியம் குரோஷியா, எஸ்டோனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் passport-ஐ பயன்படுத்தி 184 நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும். விசா அவசியம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
கனடா 9வது இடத்தை பிடித்திருக்கும் கனடா நாட்டின் passport-ஐ பயன்படுத்தி 183 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும். 
லாட்வியா, லீக்டீன்ஸ்டீன் லாட்வியா, லீக்டீன்ஸ்டீன் ஆகிய நாடுகளின் passport-ஐ பயன்படுத்தி 182 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.

 

உலகின் டாப் 10 passport பட்டியல்- எந்த நாடு முதலிடத்தில்? | Top 10 Powerful Passport In World Without Visa2025