ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15ஆயிரத்தைக் கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ தரவுகளின் படி, ரஷ்யாவில் கொவிட்-19 பெருந் தொற்றினால் 15,001பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஐந்தாயிரத்து 118பேர் பாதிப்படைந்ததோடு, 70பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை எட்டு இலட்சத்து 92ஆயிரத்து 654பேர் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான ஒரு இலட்சத்து 80ஆயிரத்து 972பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஆறு இலட்சத்து 96ஆயிரத்து 681பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 2,300பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.