அமெரிக்காவில் சிறிய விமானம் ஒன்று சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலிப்போர்னியாவின் Livermore நகரில் உள்ள விமானநிலையத்திற்கு அருகே இருக்கும் 580 interstate சாலையிலே இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த 580 interstate சாலை, சில நூறு மீட்டர் தொலைவில் விமானங்கள் பரபரப்பாக புறப்படும் மற்றும் தரையிறங்கும் Livermore விமான நிலைய ஓடுபாதைக்கு இணையாக இருக்கிறது.

E. Airway Blvd மற்றும் Portola Ave இடையே இசபெல் அவேவில் நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்ததை Livermore பொலிசார் உறுதிப்படுத்தினர்.

விசாரணை முடியும் வரை சாலை மூடப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்தில் யாரும் காயமடைவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்தவுடன் பொலிஸ் மற்றும் மருத்துவ வாகனங்கள் சம்பவியிடத்தில் குவிந்ததால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.