பற்கள் சிரிக்கும் போது அழகாக வெள்ளையாக இருக்க வேண்டும் என்றால் நாம் சில வீட்டு வைத்தியங்களை அதற்காக பண்ண வேண்டும்.
பற்கள் வெள்ளையாக இருப்பது நமது அழகிற்காக மட்டுமன்றி இது நம் பற்களின் சுகாதாரத்திலும் பங்கெடுக்கிறது.
எனவே இந்த பற்களை வெண்மையாக மாற்ற வீட்டில் செய்யக்கூடிய எளிய வழிமுறை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பற்களின் மஞ்சள் நிறத்தை போக்க எலுமிச்சை சாறு மிகவும் சிறந்தது. இந்த எலுமிச்சை சாறுடன் பேக்கிங் சோடா இரண்டையும் கலந்து ஒரு சுத்தமான பருத்தி பஞ்சை எடுத்து அதில் தொட்டு தினமும் தேய்த்து வந்தால் கறைகள் இல்லாமல் போய் விடும்.
ஆனால் எலுமிச்சை சாறு அதிகமாக பயன்படுத்த கூடாது. இதனால் பற்சிப்பிகளை அழித்து அதிக உணர்திறனாக மாற்றிவிடும்.
ஸ்ட்ராபெர்ரி பழம் எலுமிச்சை சாறு இது இரண்டையும் தேய்த்து வந்தால் பற்கள் பளீச் என்று வரும்.
நாம் விறகடுப்பு பயன்படுத்தும் போது அதில் இருக்கும் கரியை எடுத்து அதை பொடியாக்கி பற்களில் தேய்தால் பற்கள் கறைகளை இழந்து பொலிவை தரும்.
உங்களுக்கு கொய்யா இலைகள் கிடைத்தால் அதை நீங்கள் அடிக்கடி மென்று வந்தால் பற்களின் மஞ்சள் நீங்கும்.
வெண்ணெய், தயிர், காய்கறிகள், லேசான நிறம் கொண்ட பழங்கள், அதாவது கேரட், பேரிக்காய், ஆப்பிள், அத்திப்பழம், கொய்யாப்பழம், ஸ்ட்ராபெரி போன்றவற்றை உணவில் அதிகம் சாப்பிட்டு வருவதால் வெள்ளை நிறத்துடன் உங்கள் பற்கள் நீடித்திருக்கும்.