R என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் வைத்திருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக ஜாதகம், ராசி இவற்றினை வைத்து ஜோதிடம் பார்க்கப்படும் போது ஒருவரின் குணங்கள், எதிர்காலம், நிகழ்காலம் இவற்றினை கணித்து கூறுவார்கள்.
ஆனால் நமது பெயரில் தொடங்கும் முதல் எழுத்தை வைத்து நமது குணங்களை தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் R என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் வைத்திருப்பவர்களை குறித்து இங்கு பார்ப்போம்.
பொதுவாக R என்ற எழுத்தை தனது பெயரின் முதல் எழுத்தாக வைத்திருப்பவர்கள் தனித்துவமான குணங்களை கொண்டவர்களாகவும், கூட்டத்திலிருந்தாலும் தனியாகவே தெரிவார்கள். கற்பனை வளம் அதிகம் கொண்ட இவர்கள் உற்சாகமான வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். புதிய சவால்களை எதிர்கொள்ள தயாராகவும் இருப்பார்கள்.
இவர்களின் காதல் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் மிகவும் ரொமான்டிக்காகவும், துணைக்கு உண்மையானவர்களாக இருப்பதுடன், துணையை மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்வார்கள். வெளிப்படையாக பேச தயங்காத இவர்கள் எதையும் மறைக்க மாட்டார்கள். இவர்களின் குணத்தினால் மதிப்பும், மரியாதையும், நம்பகத்தன்மையும் அதிகரிக்கும்.
தொழில் மற்றும் வேலையை பொருத்தவரையில் குறிக்கோள் வைத்து முன்னோறுவதுடன், அர்ப்பணிப்புடன் செய்வார்கள். சவாலான வேலையைக் கூட சரியாக செய்து வெற்றி பெறுவார்கள். இயல்பிலேயே தலைமை பண்பு மிகுந்து, மேலாண்மை திறனை கொண்டிருப்பதுடன், குழுவாக இணைந்து பணியாற்றுவதில் வல்லவர்காளவும் இருப்பார்கள். பிரச்சினையை சாமர்த்தியமாக சமாளிப்பார்கள்.
இவர்களின் பலவீனம் என்னவென்றால், செயல் ஒன்றினை செய்ய முடிவெடுக்கும் முன்பு அதனை முழுவதும் தெரிந்து கொள்ளாமல் பின்விளைவினை கவலைபடாமல் இறங்கி வருந்துவது தான். பிடிவாதக் குணத்தினால் இருக்கும் இவர்களுக்கு மற்றவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சில தருணங்களில் அதிகளவில் உணர்ச்சிவசப்படவும் செய்வார்கள்