பொதுவாகவே ஆணும் பெண்ணும் சமன் என்று பேசினாலும் தற்காலத்திலும் சில குறிப்பிட்ட விடயங்களில் பெண்கள் ஈடுபட சமூகம் அனுமதிப்பது கிடையாது.

இந்த வகையில் இந்து மதத்தில் இறுதிச் சடங்கு செய்யும் உரிமை ஆண்களுக்கே வழங்கப்படுகின்றது. அதாவது பெற்றோர் இறந்தால் இறுதிசடங்கை மகன் தான் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்குகளை மகன் மட்டும் செய்ய என்ன காரணம்னு தெரியுமா? | Do You Know Why Do Only Men Do The Death Rituals

ஏன் இந்த உரிமை மகன்களுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்டுவதன் பின்ணனியில் மறைந்திருக்கும் காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இறுதிச் சடங்குகளை மகன் செய்வது ஏன்? சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் புத்ரா என்ற வார்த்தை இரண்டு பிரிவாக பார்க்கப்படுகின்றது.

'பு' என்றால் நரகம் மற்றும் 'த்ரா' என்றால் வாழ்க்கை. அந்தவகையில் புத்திரன் என்பதன் கருத்து ஒருவனை நரகத்திலிருந்து விடுவிப்பவர் என்பதாகும்.

இறுதிச்சடங்குகளை மகன் மட்டும் செய்ய என்ன காரணம்னு தெரியுமா? | Do You Know Why Do Only Men Do The Death Rituals

தந்தையை அல்லது தாயை நரகத்திலிருந்து உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்பவன் என குறிப்பிடப்படுகின்றது.

அதனால் தான் புத்திரனுக்கு இந்த சடங்கை செய்ய உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தில்  பெண்கள் எப்படி லட்சுமி வடிவமாக பார்க்கப்படுகின்றார்களோ அதேபோல் மகன்கள் விஷ்ணுவின் அங்கமாக பார்க்கப்படுகின்றார்கள். பகவான் விஷ்ணு அங்கம் என்றால் இங்கு வளர்ப்பவர் என்று கருதப்படுகின்றது. 

இறுதிச்சடங்குகளை மகன் மட்டும் செய்ய என்ன காரணம்னு தெரியுமா? | Do You Know Why Do Only Men Do The Death Rituals

அதாவது குடும்ப அங்கத்தவர்களை கவனித்துக்கொள்பவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குடும்ப பொறுப்புக்களை சுமப்பவர்கள் என்று பொருட்படும். 

இறுதிச் சடங்குகளின் இந்த விதி உருவாக்கப்பட்ட நேரத்தில், குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் திறன் கொண்ட பெண்கள் என்று கருதப்படவில்லை, அவர்களுக்கு எந்த சிறப்பு உரிமைகளும் இந்த காலத்தில்  கொடுக்கப்படவில்லை. இதனால் தான் இந்த நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்படுகின்றது. 

இறுதிச்சடங்குகளை மகன் மட்டும் செய்ய என்ன காரணம்னு தெரியுமா? | Do You Know Why Do Only Men Do The Death Rituals

ஆனால் தற்காலத்தில் பெண்களும் குடும்ப பொறுப்புக்களை சுமக்கின்றனர். இருப்பினும் பழைய பழக்கம் தான் இன்னும்  வீடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்றது.

ஆனால் பண்டைய காலத்தில் மகன் மட்டுமே இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்ற முறைமை வழக்கத்தில் இருந்தமைக்கு குடும்ப பொறுப்புக்களை ஆண்கள் மாத்திரம் சுமந்ததே காரணமாகும்.