இந்து சாஸ்திரத்தை பொறுத்தவரை எல்லாம் செயலையும் எல்லாரும் செய்ய இயலாது.
ஏனென்றால் ஜோதிடத்தின் சிறப்பே காலச்சக்கரத்தில் உள்ள 12 ராசிகளுக்கும் அத்தகைய ராசிகளுக்கு என்று உள்ள நட்சத்திரங்களின் படியே பலனை கொடுக்கும்.
அந்த வகையில் கருங்காலி மாலை எந்த ராசியினர் அணியலாம் என்றும், எந்த ராசியினர் அணியக்கூடாது என்றும் கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
கருங்காலி மாலை ஆனது நவக்கிரக தெய்வங்களில் ஒருவரான செவ்வாய் கிரகத்திற்கு உரியது ஆகும். இத்தகைய கருங்காலி மாலையை கழுத்தில் அணிவதன் மூலம் செவ்வாய் பகவான் அருளும் சகல பலன்களும் நமக்கு கிடைக்கும்.
அதுமட்டுமல்லாது கருங்காலி மரத்திற்கு மின் கதிர்வீச்சுக்களை சேமித்து வைக்கும் ஆற்றல் அதிகளவு காணப்படுகின்றது. இதன் காரணமாக கருங்காலி மரத்தின் நிழலின் அமர்வதனாலேயே உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கும்.
கருங்காலி மாலையை அணிவதால் தேகம் வலுவடையும். கருங்காலி மாலைக்கென தனித்துவமான விதிகள் என்று எதுவுமில்லை. அதனால் ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரும் அணியலாம்.
இந்த கருங்காலி மாலை ஆனது உடலில் காணப்படும் அழுக்கான குருதியை சுத்தப்படுத்துகின்றது. அத்தோடு கருங்காலி மாலை அணிவதால் வயிற்றில் உள்ள ஜீரண பிரச்சனைகள் நீங்கும். அதுமட்டுமல்லாது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்குகிறது.
குறிப்பாக ஆண்,பெண் என இருபாலரதும் மலட்டுத்தன்மையை நீக்குவதோடு குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு சிறந்த பலனை அளிக்கும்.
இவை தவிர எப்போதும் சோம்பல் நிலையை உணர்பவர்கள் அவ்வாறான சோம்பேறி தனம் நீங்கி சுறுசுறுப்புடன் செய்ல்பட வழிவகுக்கும்.
இளம் வயதினருக்கு மாங்கல்ய பாக்கியத்தை உருவாக்கும். அத்தோடு ஆண்களின் ஆண்மையை அதிகரிப்பதோடு உடல்வலு உறுதியடைய வைப்பதோடு மட்டுமல்லாது கோபங்களை குறைக்கும். இத்தகைய கருங்காலி மாலை அணிபவர்களுக்கு பேச்சுத்திறமை அதிகரிக்கும்.
அதுமட்டுமல்லாமல் தொழில் மற்றும் வியாபாரங்களில் ஏற்படும் போட்டித்தன்மை குறையும். மேலும் நிலம் தொடர்பான தொழிலை மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கு சிறந்த அனுகூலம் கிடைக்கும்.
இந்த மாலை அணிவதனால் விஷ பூச்சிகள் நம்மை அண்டாது. பயணங்களை மேற்கொள்ளும் போது இந்த மாலை அணிவதால் வாகனங்களில் ஏற்படும் விபத்துக்களைத் தடுத்து பயணங்களை சிறப்பானதாக மாற்றி அமைக்கும்.
செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் குறிப்பாக இந்த மாலை அணிந்து வர தோஷம் நீங்கி திருமண தடைகள் இல்லாமல் போகும்.
கருங்காலி மாலையை அணிவதனால் சகோதரர்கள் கணவன் மனைவிக்கு இடையில், உண்டாகும் சச்சரவுகள் நீங்கி உறவு பலப்படும். ராசியை பொருத்தவரையில் பாகுபாடு இன்றி அனைவரும் கருங்காலி மாலையை அணிய முடியும்.