இந்தியர்களின் ஆன்மீகத்தில் கோயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.
உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் 4 மனிதர்கள்.. இவங்ககிட்ட ஜாக்கிரதை-சாணக்கிய நீதி
சில கோயில்கள் பக்தர்களின் தேவை நிவர்த்தி செய்வதாக பக்தர்கள் நம்புகிறார்கள். பரம்பரை வழியாக இந்த நம்பிக்கைகளும் கடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஆண்டார்குப்பம் ஸ்ரீ பாலசுப்பிரமணியரை மனம் திறந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற கதை உள்ளது. இந்த வழிபாட்டை திருமணம் முடிந்து நீண்ட நாளாகியும் குழந்தை பெறாத தம்பதிகள் முயற்சி செய்யலாம்.
இவ்வளவு சக்தி பால் அபிஷேகத்திற்கு இருக்கிறதா? என்ற சந்தேகம் இருக்கும். இதற்கான பூரண விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வருகின்ற ஒவ்வொரு மாதமும் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தினத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் ஆண்டார் குப்பம் தலத்தில் தங்கி வழிபாடு செய்யவேண்டும்.
மறுநாள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு முருகனுக்கு செய்யப்படும் பால் அபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இந்த பூஜையை தொடர்ந்து மூன்று கிருத்திகை நாட்கள் செய்வதால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.கோவிலில் உள்ள தலவிருட்சம் அருகே உள்ள மரத்தில் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டுவார்கள்.
இன்று வரை அந்த மரத்தில் நூற்றுக்காண தொட்டில்கள் கட்டபட்டுள்ளன. இதனால் ஏராளமான பக்தர்கள் பலன் பெற்றதாகவும் அப்பகுதி மக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது.