ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சிக்கும் ஒவ்வாரு பலனை ராசிகள் பெறுகின்றன. ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன்.
இவர் தனது பெயர்ச்சியை மற்ற கிரகங்களை விட மிகவும் குறுகிய காலத்தில் செய்து முடிப்பார். தற்போது புதன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
பிப்ரவரி மாதத்தின் இறுதியில் புதன் கும்ப ராசியில் உதயமாவதோடு, மீன ராசிக்கும் செல்லவுள்ளார். இந்த பெயர்ச்சி மூலம் சில ராசிகள் பெரும் நிதி நன்மை பெறப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கும்பம் |
- கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார்.
- உங்களுக்கு பல திடீர் உதவிகள் வந்து சேரும்.
- இந்த கால கட்டத்தில் உங்களுக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருக்கும்.
- ஏதாவது வேலை தொழில் செய்பவர்கள் பல நன்மைகளை பெறுவார்கள்.
- நீங்கள் பேசியே பல விடயங்களை வெற்றி கொள்வீர்கள்.
- ஏதாவது ஒரு விடயம் நினைத்தால் அதை செய்து முடிப்பீர்கள்.
|
கடகம் |
- கடக ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார்.
- உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- சொந்த ஊர் விட்டு வெளியூர் செல்வீர்கள்.
- தொழில் ரீதியாக பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
- இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
- வீட்டில் நல்ல சுப நிகழ்ச்சி இடம்பெறலாம்.
|
ரிஷபம் |
- ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார்.
- இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் புதிய வேலையை தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
- வருமானத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
- இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- பணத்தை அதிகளவில் சேமித்து நிதியில் முன்னேறுவீர்கள்.
|