ஸ்காட்லாந்து நாட்டில் தும்மலை அடக்கிய நபருக்கு நேர்ந்த சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக மனிதர்களுக்கு தும்மல் வருவது என்பது இயற்கையே... ஆனால் இவ்வாறு வரும் தும்மலை சிலர் அடக்க நினைப்பார்கள்... இதனை விளையாட்டாக செய்வதை அவதானித்திருப்போம்.

ஆனால் இவ்வாறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை சம்பவம் ஒன்று நடந்துள்ளது அதனை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

தும்மலை அடக்கிய இளைஞருக்கு நேர்ந்த சோகம்... எச்சரிக்கை பதிவு | Youth Men Suppressing A Sneeze Danger

ஸ்காட்லாந்து நாட்டில் இளைஞர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்த போது தும்மல் ஏற்பட்டுள்ளது. ஆனால் தும்மலை வாயை மூடி அடக்கியதால் அவரது மூச்சுக்குழலில் 2 மிமீ அளவிற்கு கிழிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த 30 வயதான இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த கிழிசல் அழுத்தம் காரணமாக ஏற்பட்டதாகவும், இந்த காயம் தானாகவே குணமாகிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.