திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேசத்தில் நஞ்சருந்தி மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத்தகராறு காரணமாக அவர் நஞ்சருந்திய நிலையில், அவரை மஹதிவுல்வெவ வைத்தியசாலைக்கு கொண்டுசென்று, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று (03) அவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் மஹதிவுல்வெவ முதலாம் கண்டத்தில் வசித்து வரும் டபிள்யூ.எம்.வசந்த திசாநாயக்க (35வயது) என்பவரே என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.