பொதுவாக ராசிபலன்கள் கிரகங்களின் மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன.

இது போன்ற மாற்றங்கள் ராசிகளின் வாழ்க்கையிலும் ஒரு சில தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் இதுவரை அஸ்தமன நிலையில் இருந்தார்.

இப்படியொரு நிலையில், செவ்வாய் இன்று தனுசு ராசியில் உதயமாகியுள்ளார். இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு தொழில் விருத்தி மற்றும் கொள்ள இலாபம் கிடைக்க போகின்றது.

அப்படி எனின் யார் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

தனுசு ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய்: தொழில் முன்னேற்றம் அடைய போகும் ராசிக்காரர்கள் | Lucky Zodiac Signs In Tamil For Mars Transit

1. மேஷம்

மேஷ ராசியில் 9 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகியுள்ளார். இதன் காரணமாக தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். மேலும் வெளிநாடுகளிலிருந்து நல்ல வேலைகள் தேடி வரும். தற்போது பிடித்த வேலை கிடைக்கவில்லை என கவலை கொள்ள வேண்டாம். கூடிய விரைவில் நல்ல செய்தி வரும் வாய்ப்பு இருக்கின்றது.

2. கடகம்

கடக ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகியுள்ளார். இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் ஏற்ற இறக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. தொடர்ச்சி முயற்சிக்கும் பொழுது நல்ல பலன் கிடைக்கும். வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள் இந்த காலப்பகுதியில் நல்ல இலாபம் பார்ப்பார்கள்.

3. சிம்மம்

இந்த ராசியில் 5 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகியுள்ளார். தொழிலில் முன்னேறும் அதிர்ஷ்டம் நீண்ட நாட்களுக்கு பின்னர் இவர்களுக்கு கிடைத்துள்ளது. தொழில் புரியும் இடத்தை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும் வாய்ப்புள்ளது. படித்த படிப்பிற்கு வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் இன்று முதல் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.